Saiadimai/அருளாளர் சாயடிமை

அருளாளர் சாயடிமை 
அருளாளர் சாயடிமை
Saiadimai .png
அருளாளர் சாயடிமை(எ) ச.குமரவேலு
Born5 August 1991
ஜோகூர்பாரு, பொன்தியான்,
தற்போது லுனாஸ்,கெடாமலேசியா
NationalityMalaysian
OccupationFounder of Vaalai Arivaalayam , Speaker , Writer
Parent(s)Ramachandran, Susila
அருளாளர் சாயடிமை என்று அழைக்கப்படும் வாலை அறிவாலயம் குருவானவர் ( ஆகஸ்டு 5 , 1991 ) மலேசியா , ஜோகூர் பாரு ஸ்கூடாயில் பிறந்தார். இவர் வாலை அறிவாலயத்தின் நிறுவனராவார். தமிழியல் மீது அளவற்ற பற்றுடைய இவர் சித்தர்களின் சித்தாந்தத்தை ஏற்று போதனை செய்து வருகிறார். 100 வாலை மறைகளை இயற்றி தன்னுள் விளங்கும் வாலையை எவ்வாறு அடைவதென விளக்கமளித்துள்ளார். சூனியவாதம்,அனாத்மவாதம்,அநித்தியவாதம், அணுத்தத்துவம், தன்னை அறிதல், வாலை தயவு, அகத்தாய்வு, சித்தாந்தம் போன்ற தத்துவங்களை சொற்பொழிவு, தியான பயிற்சிகள், மறை வகுப்புகள் மூலம் மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார்.

பிறப்பு[edit source]

இவர் ஜோகூர் பாரு பொன்தியான் மலேசியாவில் நடுத்தரம் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் சண்முகம், இராஜேஸ்வரி. இவரோடு பிறந்தவர்கள் பார்வதி,சங்கர்,வாணி,யோகேஸ்வரன்,அனேஸ்குமார் ஆகிய ஐவரும் உடன்பிறந்தவர்கள். இவர் பிறந்த சில காலங்களிலே பெரியப்பா வீட்டில் சேர்க்கப்பட்டார். இவர் வளர்த்தவர்கள் இராமசந்திரன்,சுசிலா ஆவர். பிறந்த தின மாதங்களிலே இவர் பெரியப்பாவின் வீட்டில் சேர்க்கப்பட்டார். இவரது தாயார் சில காரணங்களுக்காக இவரைக் கருவிலே களைத்து விட முயற்சித்தார். ஆயினும் அதனை எல்லாம் கடந்து இவர் பிறந்தார். சிறுவயது முதலே குடும்பங்களை விடுத்து பெரியப்பா வீட்டில் வளர்ந்து வந்தார்.

கல்வி[edit source]

இவர் மலேசியா கெடா லுனாஸ் மாவட்டத்திலுள்ள வெல்லஸ்ஸிலி தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். பின் லுனாசு, இடைநிலைப்பள்ளியில் பயின்று முடித்தார். அதன்பிறகு உயர்கல்வி கோலாலம்பூரில் மாசா கல்லூரியில் தாதியர் பட்டம் தொடர்ந்தார். பொருளாதார சிக்கலினால் கல்லூரி படிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

ஞானம்[edit source]

எல்லாம் பிள்ளைகள் போல் இவரும் ஆரம்பத்தில் விளையாட்டு புத்தியோடு காணப்பட்டார். தனது 14 வயதில் பெரியப்பாவிடமிருந்து பிரிந்து தன் சொந்த அம்மா வீட்டிற்கே சென்றார். தன் குடும்பத்தோடு மகிழ்ந்திருந்த இவருக்கு சோதணைகள் ஆரம்பமானது. தனது சில தவறான ஆன்மீக புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தால் புறகணிப்பட்டார். பின் மீண்டும் பெரியப்பா வீட்டிற்கே வந்து சேர்ந்தார். தாயாரை இழந்த வருத்தமும், சோகமும் இவரை நாளுக்கு நாள் தனிமைப்படுத்தியது. சீரடி சாயிபாபாவின் வழிபாட்டில் ஆர்வம் ஏற்பட , தனது சுய விழிப்புணர்வால் முதல்நிலை ஞானம் படிப்பினை கிட்டியது. பின்னர், வாழ்க்கையில் இவர் சந்தித்த நம்பிக்கை துரோகம், சுயநல மனிதர்கள், பகட்டு, அர்த்தமற்ற அன்பு, போன்றவை இவரை சித்தர்கள் மெய்வழியில் நடக்கச் செய்தது. தனது 22 - ஆவது அகவையில் இவருக்கு திராவிட சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு உண்டாகியது. கௌதம புத்தரின் தம்மம் , பல சித்தர்களின் பாடல்கள் வழி மெய்யுணர்வை இவர் அடைந்துள்ளார்.

இவரது குருமார்கள்[edit source]

நேரடி குரு இல்லாமல் தனது சொந்த வாழ்க்கையின் பாடத்தில் மெய்யுணர்வு பெற்ற இவருக்கு மறைமுக குருமார்கள் உள்ளனர். அவர்களில் முதலானவர் சீரடி சாயிபாபா . 16-ஆவது வயதில் சாயிபாபாவின் மீது இவருக்கு ஒரு நல்மதிப்பு உண்டாகியது. சாயிபாபாவின் எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாடு இவருக்குப் பிடித்தது. ஆகையால், பாபாவின் பெயரில் பாடசாலை ஒன்று தொடங்கி பள்ளி மாணவர்களுக்குத் தேவாரம் வகுப்பும், பஜனையும் சொல்லிக் கொடுக்கலானார். பின்னர் சிவ வாக்கியர், போகர்,திருமூலர்,திருவள்ளுவர், கொங்கணவர், பாம்பாட்டியர்,குதம்பையர்,கடுவெளியார் போன்ற சித்தர்களை வழிகாட்டியாகக் கொண்டார். தமிழில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் தமிழிலக்கணம்,இலக்கியத்திலும் நாட்டமுடையவராக இருப்பதால் திருக்குறள்,கொன்றை வேந்தன், மூதுரை, நாலடியார், உலகநீதி, ஆத்திச்சூடி போன்ற நூல்களை அருளியவர்களையும் தன் குருவாக எண்ணி வருகின்றார். இவரது மனதில் என்றும் நீக்கமற நிறைந்து தத்துவ ஆசானாக விளங்குவது கௌதம புத்தர் ஆவர்.

வாலை அறிவாலயம்[edit source]

தனது 16 வயதில் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் லுனாஸ்,தாமான் மக்மோரில் சுப்பிரமணியம் வீட்டு திண்னையில் சிறிதாகத் தொடங்கப்பட்டது. பின் ஆசிரியர் யசோதா கோவிந்தசாமியின் உதவியால் தனித்த ஒரு இடத்திற்கு மாற்றமாகி இன்று வாலை அறிவாலயம் என்று அறிமுகமாகிவுள்ளது, அறிவாலயத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை மறைகல்வி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 18 வயது மேலானவர்கள் வாலை மறைகல்வி 1,2,3 என படிப்படியாக ஞானம் பயின்று குருத்துவம் பெறலாம். வார வியாழக்கிழமை இரவு 8.00-க்கு குரு பூசையும் , ஆரத்தியும் இடம்பெறும். தமிழ்மொழி இலக்கணம் இலக்கியம் கற்றுத்தரப்படுகிறது.

மறைகல்வி[edit source]

வாலை மறைகல்வி வகுப்பின் ஆசிரியராக விளங்குகிறார். மறைகல்வியின் வாயிலாக இவர் கூறிவரும் இரண்டு அடிப்படை செய்திகள். ஏகாதிப்பத்தியம்,நல்லிணக்கம். உலக ஏகாதிப்பத்தியம் அரசினாலும், மதங்களாலும் மனிதன் நல்வாழ்வைப் பெற முடியாமல் அனுதினமும் துயர் அடைகிறான். ஏகாதிப்பத்தியம் பற்றியும், மதங்களின் புரட்டுக்களைப் பற்றியும் விழிப்புணர்வு தரும் விதமாக மறைக்கல்வி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

சமூக நீதி[edit source]

நால்வருண கோட்பாடுகளை எதிர்த்து பேசி வருகிறார். ஆரிய பழக்கவழக்கங்களை எதிர்த்தும் சமத்துவ சமநீதி போதித்தும், பெண் உரிமைக்கும் தொடர்ந்து புத்தக்கங்கள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் வாயிலாகவும் , சமூகவளைத்தளங்கள் வாயிலாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்.

தனித்திறன்[edit source]

சிறந்த பேச்சாளர் , கவிதையாளர், பஜனையாளர், பூசையாளர், நற்குடும்பம் கிளை இயக்கத்தின் ஆலோசகர், தியான பயிற்சி ஆசிரியர், மறைக்கல்வி ஆசிரியர் , தமிழ்மொழி பாசறை ஆசிரியர், எழுத்தாளர்

படைப்புகள்[edit source]

200 தனிப்பாடல்கள் எழுதியுள்ளார். 100 வாலை மறை அருளியுள்ளார். குண்டலினிதவம் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 70-க்கும் மேற்பட்ட மாத இதழ் (தம்மம்) வெளியீடு செய்து வருகிறார். குண்டலினி பாமாலை இயற்றியுள்ளார்.

Comments

Popular posts from this blog

சமூக நீதி - தொடர் கட்டுரை

Vaalai Arivaalayam Opening Date&Time