அறிவாலயத்திற்குத் திடீரென்று ஞானோதயம் வந்து , சமூக நீதி கட்டுரையில் பகவத்கீதை , மனுதர்மம் பற்றி அவதூறு பரப்புவதாக எண்ண வேண்டாம். இது நமது மார்க்கம்(மதம்). நமது மார்க்கம் தலைசிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை அடியேனுக்கும் (சாயடிமை) உள்ளது. ஆனால் , சத்தியத்தைப் பொய் திரித்துப் பேச லாகாது. நாளைய தலைமுறை நல்லமுறையில் வளர்க்கப்பட வேண்டும் , அதன் அடிப்படையில்தான் சீர்திருத்தம் குறித்து இக் கட்டுரை எ ழு த ப் ப டு கி ற தே தவிர யாரையும் நோகடிக்கும் நோக்கம் நமக்கில்லை. அவ்வாறு செய்தால் நமக்கு நாமே தீங்கு இழைத்துக் கொள்வதற்குச் சமம். ஆனால் சிந்தையில் பட்டத் தவறுகளைச் சொல்லாதிருந்தால் , அது மிகப் பெரிய துரோகமாகப் பார்க்கிறோம். மனதில் பட்டதை ஆதாரத்துடன் சொல்கிறோம். அடியேனும் ஆரம்பக்காலத்தில் ஆரிய வழக்கத்தின்மீது ஆர்வமுடையவராகவே இருந்தோம். ஆர்வம் மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்தது. நமது மதத்தின் மீது எழுந்த நம்பிக்கை அதனை புனித மானதாக எண்ணச்செய்தது. நாளடையில் வாலையின் அருளாளும் , படிப்புணர்வாலும் , உள்ளிருந்து உணர்த்தப் பட்டதாலும் பேருண்மை வெளிப்பட்டது. நாம் நம்பிக் கொண்டிருந...