சமூக நீதி - தொடர் கட்டுரை
அறிவாலயத்திற்குத் திடீரென்று ஞானோதயம் வந்து, சமூக நீதி கட்டுரையில் பகவத்கீதை,மனுதர்மம் பற்றி அவதூறு பரப்புவதாக எண்ண
வேண்டாம். இது நமது மார்க்கம்(மதம்). நமது மார்க்கம் தலைசிறந்ததாக இருக்க வேண்டும்
என்ற ஆசை அடியேனுக்கும் (சாயடிமை) உள்ளது. ஆனால், சத்தியத்தைப்
பொய் திரித்துப் பேச லாகாது. நாளைய தலைமுறை நல்லமுறையில் வளர்க்கப்பட வேண்டும்,
அதன் அடிப்படையில்தான் சீர்திருத்தம் குறித்து இக் கட்டுரை எ ழு த
ப் ப டு கி ற தே தவிர யாரையும் நோகடிக்கும் நோக்கம் நமக்கில்லை. அவ்வாறு செய்தால்
நமக்கு நாமே தீங்கு இழைத்துக் கொள்வதற்குச் சமம். ஆனால் சிந்தையில் பட்டத் தவறுகளைச் சொல்லாதிருந்தால், அது
மிகப் பெரிய துரோகமாகப் பார்க்கிறோம். மனதில் பட்டதை ஆதாரத்துடன் சொல்கிறோம்.
அடியேனும் ஆரம்பக்காலத்தில் ஆரிய வழக்கத்தின்மீது ஆர்வமுடையவராகவே இருந்தோம்.
ஆர்வம் மிகப் பெரிய
நம்பிக்கையைத் தந்தது.
நமது மதத்தின் மீது எழுந்த
நம்பிக்கை அதனை
புனித மானதாக எண்ணச்செய்தது.
நாளடையில் வாலையின் அருளாளும், படிப்புணர்வாலும், உள்ளிருந்து
உணர்த்தப் பட்டதாலும் பேருண்மை வெளிப்பட்டது. நாம் நம்பிக் கொண்டிருந்த மதத்தில்
சமத்துவம் இல்லாத பிரிவினை வாதங்கள், மொழி வேற்றுமைகள்,
இன வேற்றுமை கள், பெண்னடிமைதனம் உள்ளிருப்பதை
அறிந்தோம். இந்த இழிவிலிருந்து மீண்டு எழ புத்தரின் வாழ்வியல் சிந்தனைகள் பெரிதும்
நமக்கு உதவியது. பகவத்கீதை, மனு, ரிக்
வேதம், சூத்திரங் களைப் பொருள் விளக்கத்துடன்
வாசித்தறியும்போது இவைகள் உறுதியாக்கப்பட்டுள்ளது.
சூத்திர
இழிவிலிருந்து நாம் வெளிப்பட்டு, தமிழர்களாக உயர வேண்டும் என்ற நோக்கத்தில் தான், அறிவாலயம்
பெயர் மாற்றம் செய்து 100 வாலை மறைகளைக் கொண்டு கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது.
தமிழர்கள் மொழிவழி சமூகமாக ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றினால் சாதிவெறி சரியும்,
சமத்துவம் மலரும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. அதற்குண்டான
அறப்பணிகளை வாலை அறிவாலயம் செய்து கொண்டு வருகிறது. சாதிகள் இல்லாத சமத்துவமான ஒரு
நிலைப்பாடு நமக்குள் மலர வரலாற்று திரிபுகளை முதலில் நாம் கண்டறிய வேண்டும்.
வரலாறை மறந்த மக்கள் அடிமைகளாவது நிச்சயம். அதுதான் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. நீண்டநெடிய வரலாற்றுப் பெருமையுடைய தமிழினம் இன்று
தங்களுடைய வரலாறுகளைத் துழைத்து விட்டனர். நமக்கு சம்பந்தமில்லாத ஆரிய பழக்கத்திற்கு
அடிமையாகி இருப்பது
வேதனைக்குரியது.
யார்மீதும்
நமக்கு பொறாமையில்லை. பொறாமைபட இதில் என்ன இருக்கிறது ? வேதனையும் சுமந்துவந்த வலியும்தான் நம்மை
இப்பணிகளைச் செய்யத்தூண்டுகிறது. இது அறிவாலயம் எடுத்துக்கொண்ட பணியில்லை.
நூற்றாண்டுகளுக்கும் மேல் தமிழ்சான்றோர்கள் சுமந்த வந்த வலிகளை இன்று அறிவாலயம்
சுமக்க முயற்சி செய்கிறது. தீர்வுகளைத் தந்தருள முயற்சிகள் எடுக்கப்பட்டு
வருகின்றது. அப்படியென்ன பெரிய பிரச்சனை ? என்று கேட்டால் ,
உங்களை கண்டு அனுதாபம் மட்டுமே படுகிறோம்.
தமிழர்கள் வீடுகளில்
தமிழில்லை. தமிழர்கள் முன் நின்று நடத்தும் எவ்விழாக் களிலும் தமிழ் இல்லை, தமிழ்சார்ந்த அறமும் இல்லை என்பதே நமது வருத்தம் ; வேதனை.
எல்லாம் புரிந்தது போல் பேசுவது சுலபம். சிந்தனை செய்து பார்த் தால் உண்மை
புரியும். உண்மையை உள்வாங்க வாலையின் அருளும் தேவை.
தமிழர் திருமணம் - அங்கு தமிழ் இல்லை.
புதுமனைபுகுவிழா – (கிரகபிரவேசம்) கிரகபிரவேசம் என்று சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் புரிகிறது. தமிழில் சொன்னால் விளங்காது. அங்கும் தமிழில்லை.
இறந்தவர் வீட்டு கிரியை - கருமக்கிரியை , தவசம் , தர்ப்பணம் கிரியை அதிலும்
தமிழ் இல்லை
தமிழர்கள் ஏற்றுள்ள வருடம் - சமஸ்கிருத வருடம் . 60 வருடம்பெயரையும் சொல்லி பாருங்கள் ஒன்றுமே
தமிழில்லை. ஆனாலும்,
தமிழ்வருடம்
திதி - அனைத்து திதி பெயரும் தமிழில்லை. ஆனாலும், நல்ல
காரியம் , முத்தோர் வழிபாட்டிற்கு திதி
பார்ப்பார்கள்.
நட்சத்திரம் - நட்சத்திரம், நேரம், கிரகம் குறித்து தமிழ்ச்சான்றோர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனாலும் அவற்றை தமிழர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
வாஸ்து - தமிழில்லை.
ஆலய வழிபாடு - தமிழுக்கு அங்கு வேலையே
இல்லை.
இப்படி எல்லாவற்றிலும்
தமிழுக்கு இடமே இல்லை. எப்போது அங்கு தமிழில்லையோ, அப்போதே அது நம்முடையதில்லை என்ற சின்ன
செய்திகள் கூட நமக்கு விளங்கவில்லையென்றால், யார் தான் நம்மை காப்பாற்ற போகிறார்கள். தமிழ்சான்றோர்கள் நமக்கு அருளிய எந்த
அறநூலிலும், இராசி நட்சத்திரம்,
திதி பற்றிய குறிப்புகளில்லை. ஆலய வழிபாடு அனைத்தும் தமிழிலிருந்து
விடுபட்டு நிற்கின்றது. அந்நிய கலாச்சாரம் நம்மை ஆளுமை செய்கின்றது. இது குறித்து
யாருக்கும் எந்தவொரு விழிப்பும் இல்லை. இருக்கின்ற அனைத்து சாமியார்களும் சமஸ்கிருதத்
திற்கு சொம்பு தூக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவமானமில்லையா ? வேத மந்திரங்களை நாங்கள் மதிக்கிறோம் , படிக்கிறோம் ;
எங்கே ஒரு ஐயரை பூசையில் திருக்குறள் ஓத சொல்லுங்க பார்ப்போம் ;
இது பெருமையா ! அவமானமா ! முடிவு நீங்கள் சொல்லுங்கள்.

Comments
Post a Comment