Posts

Showing posts from October, 2021

வாலை அறிவாலயத்தில் 10-ஆம் ஆண்டு சாய் பரமானந்தத் திருவிழா

Image
இவ்வருடம் நமது  கூலிம் பாயா வாலை அறிவாலயத்தில் சாய் பரமானந்தம் திருவிழா 20.11. 2021 அன்று காலை 7.30 இகழவிருக்கிறது. இவ்வருடத்தில் கருப்பொருள் கிரியா யோகம். மறைகுருவாக மகாவதார் பாபாஜி திருநெறிகள் மறைநற்செய்தியாக அறிவிக்கப்படும்.  கிரியா யோகம் என்றால் என்ன ? கிரியை எனப்படும் காரியம் . எடுக்கும் காரியங்கள் சித்தி பெற மனதை அல்லது எண்ணத்தைச் சீர்ச்செய்தலும், எடுக்கும் காரியத்தில் வெற்றி முரசொலிக் கொட்டவும் தன்னைத் தான் தயார்படுத்துதலை கிரியா யோகம் என்கிறோம். இக்கலை தமிழ்ச் சித்தர்கள் மரபில் ஆண்டாண்டு காலமாக, குறிப்பாக ஆசிவகம் ஐய்யனார்களின் வழியாக தமிழகத்தில் வாழையடிவாழையாக உபதேசித்து வந்த கருத்தியல் ஆகும். இதனை இவ்வருடத்தின் மறை கருத்தியாலாக ஏற்பதில் அறிவாலயம் பெருமிதம் கொள்கிறது, மகாவதார் பாபாஜி நாகராசன் என இயற்பெயர் உடையவர். தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர். பிற்காலத்தில், இவர் இமயமலைக்கு வந்ததாகவும், பின் பொதிகை, இலங்கை போன்ற இடங்களில் தவம் செய்து, அகத்தியரின் பூரண அருளையும், வாலையின் திருக்காட்சி கண்டதாகவும், திருமூலரின் சீடராகவும் அறியப்படுகிறார...