வாலை அறிவாலயத்தில் 10-ஆம் ஆண்டு சாய் பரமானந்தத் திருவிழா
கிரியா யோகம் என்றால் என்ன ?
கிரியை எனப்படும் காரியம் . எடுக்கும் காரியங்கள் சித்தி பெற மனதை அல்லது எண்ணத்தைச் சீர்ச்செய்தலும், எடுக்கும் காரியத்தில் வெற்றி முரசொலிக் கொட்டவும் தன்னைத் தான் தயார்படுத்துதலை கிரியா யோகம் என்கிறோம். இக்கலை தமிழ்ச் சித்தர்கள் மரபில் ஆண்டாண்டு காலமாக, குறிப்பாக ஆசிவகம் ஐய்யனார்களின் வழியாக தமிழகத்தில் வாழையடிவாழையாக உபதேசித்து வந்த கருத்தியல் ஆகும். இதனை இவ்வருடத்தின் மறை கருத்தியாலாக ஏற்பதில் அறிவாலயம் பெருமிதம் கொள்கிறது,
மகாவதார் பாபாஜி
நாகராசன் என இயற்பெயர் உடையவர். தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர். பிற்காலத்தில், இவர் இமயமலைக்கு வந்ததாகவும், பின் பொதிகை, இலங்கை போன்ற இடங்களில் தவம் செய்து, அகத்தியரின் பூரண அருளையும், வாலையின் திருக்காட்சி கண்டதாகவும், திருமூலரின் சீடராகவும் அறியப்படுகிறார். இன்றும் அவர் சீவனுள்ளவராகவும், இளமையுடனும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. சுவாமி பாபாஜியை மறைகுருவாக இவ்வருடம் வாலை அறிவாலயம் கொண்டாடுகிறது.
'நமது முன்னோர்களை நாம் கொண்டாட வேண்டும், நமது தமிழ்ச் சிந்தனை மரபுகளைத் தமிழர்கள் அடுத்த தலைமுறை வரை கடத்த கடமைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்' என வேட்கையோடு திருவிழாவில் வருடந்தோறும் தமிழ்க்குருமார்களின் கருத்தியலை முன்வைத்து திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

Comments
Post a Comment