சமூக நீதி கட்டுரை தொடர் 3
எஎ
எந்த சமூகம் உழைக்கும் தொழிலாளிகளைக்
கொண்டாடி தகுந்த மதிப்பைத் தருகிறதோ,
|
எஎ
|
அச்சமூகம் சீரும் சிறப்புமாய் இருக்கும். உழைக்கும் மக்களை மதிக்காத எந்த சமூகமும் வாழாது;வளராது என்பது கண்கண்ட உண்மை. அவ்வாறு உழைக்கும் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட சூத்திர மக்களை மிகவும் இழிவாகக் கருதும் மனுஸ்மிருதி ஒரு அநீதி நூலே என்று அறிவாலயம் கருதுகிறது.
எப்போது இன்னூல் (மனுதர்மம்) பிராமணர் என்ற
ஒரு சாராரை மட்டுமே உயர்த்தி
பேசுகின்றதோ அப்போதே
இன்னூல் சமூகத்திற்கு
எதிரானது என
அர்த்தமாகிறது. மேலும்,
இதனை இந்துமக்களுக்குச் சட்டமாக விதித்தவர்கள் வேற்றுமை
உணர்வுகளையும், சூத்திரர்களை இழிவாகக் கருதும் மனோ பாவம்
உடையவர்கள் என்றும் தெள்ளத்தெளிவாக விளங்கு கிறது. தங்களை தீவிர இந்துவாக
நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு முறையாவது மனுதர்மத்தை
வாசிக்க வேண்டும். சூத்திரர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதென்ற விதியையும் மனு
உண்டாக்கியதன் காரணம் ஒருவேளை அதனை படித்துப் புரிந்துக்கொண்டால்,பின்னா ளில் உரிமை குரல் எழுந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்திக்கக்கூடும்
! வேதம் ஓதுவதை சூத்திரர் கேட்டால், அவர்களது காதில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற கொடூர வன்மத்தை உள்ளடக்கியதாக மனு விளங்குகிறது. வர்ண
தர்மம்தான் இந்தமதத்தின் அடிப்படையாக விளங்கு கிறது. ரிக்வேதம் முதல் உபநிஷத்
புராண கதை வரை, இதிகாசம் இரண்டிலும்
அடித்தளமாக வர்ணம் தர்மமே உள் ளது. மனுசட்டம் ஒருபோதும் உழைக்கும் மக்களுக்கு
நீதியை வழங்காது. தமிழர்கள் எப்போது ஆரிய மதத்தை ஏற்றுக் கொண்டா ர்களோ அன்றே
அவர்களின் வாழ்வு அறத்திலிருந்து மாறுப்பட்டு விட்டது. சாதியியல்
சமூகமாக பிரிந்து விட்ட தமிழர்கள் இன்றளவும் ஒன்றுப்பட்டு வாழவில்லை என்பதே
நிதர்சன உண்மை.
எல்லோரையும் மதித்து சகோதர மனப்பான்மையோடு அரவணைத்து செல்லும் சமூகமே வரலாற்றில் நன்மதிப் பைப் பெற்றுள்ளது.இந்து மதம் ஒன்றுபட்ட ஒரே சமூகம் இல்லை. பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை சிந்தனைகளை உடைய மதமாக இருக்கிறது. இதை சொன்னால், ஏதோ பொய் சொல்வதாகவும், அந்நிய மதத்தாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சொந்த மதத்தை இழிவாக பேசுவதாக வும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வேதங்களை நன்கு படித்தறிந்தால் அறிவாலயம் எடுத்துச் சொல்லும் உண்மை நன்கு விளங்கும். வேதத்தை படித்து அறிய முடியாதவர்கள் மனுதர்மத்தை படிக்கலாம், அதுவும் இ ய லா த வ ர் க ள் எளிதாக கிடைக்கக்கூடிய பகவத்கீதையையும் படித்து இவ் வுண்மைகளை அறிந்துக் கொள்ளலாம்.
|
|
இன்னொருவருடைய பிறப்பை இழிவாக
நினைக்கும் குணமே சான்றோர் களுக்கானதில்லை. அவ்வாறு நினைப்ப வர்கள் மத்தியில்
நிச்சயம் சமத்து வம் இருக்காது. தூரத்தி லிருந்து பார்க்கும்போது இதனுடைய சிக்கல்
விளங் காது, கொஞ்சம்
கூர்ந்து கவனித்துப் பார்த்தால்தான் அறிவாலயம் எடுத்துச் சொல்லும் கருத்து நன்கு
புரியும். கடவுளை யாரும் மறுக்கவில்லை. ஆனால், கடவுளின் பெயரால் வேற்றுமை களைப் பரப்பும் மதங்களைக்
கண்டிக் கிறோம். இந்துமதத் தின் அடித்தளமாக சாதி கூறுகள் பேசப் படுவது மிகவும்
கவலையாக உள்ளது.
தமிழர்கள்
இதனை கருத்தில்
கொண்டு ஆரிய சடங்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது
எண்ணம். இங்கு பிராமணர்கள் புனிதமானவர்கள் என்றும் சூத்திரர்கள் இழிவாகவர்கள் என்
றும் கருதுவது சமூகநீதிக்கு எதிரானது. இப்படி பற்பல பேத ங்களை எடுத்துச்சொல்லும்
ஒரு புத்தகம் எப்படி நமக்கு அற நூலாக இருக்க முடியும் என்று சிந்திக்க வேண்டும்.
பேச வேண்டிய கடமையுள்ள அடியார்களும் இதுகுறித்து நேர்பட புரட்சி செய்யாததின்
விளைவு இன்றள வும் மனுதர்மம் தமிழர்களுக்கு புனிதநூலாக இருந்துவருகிறது.
ரிக் வேதம்
பத்தாம் மண்டலத்தில் அமைத்துள்ள புருஷ சூக்தம் சாதி பிரிவுக ளைப் பிரித்து பேச ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து படிபடியாக உபநிஷத்
கதைகள் மற்றும் ஆரியசட்ட நூலாக மனு, மனுவைத் தொடர்ந்து உபநிஷத் கதைகள்,
கீதை என்று எல்லாவற்றிலும்
வர்ணதர்மம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதில் உழைக்கும் மக்களாக சூத்திரர்கள் மிகவும்
அடிமைக ளாக மதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை உரி மைகள் மறுக்கப்பட்டு,
கீழ்தரமாக
மதிக்கப்படுகின்றனர். இதனை மறுத்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அ வ ர் க ளது
கருத்துக்களை நாம் ஏற்கிறோம். ஆனால், அறிவாலயம் கேட்கும் அனைத்து
கேள்விகளுக்கும் மறுப்பவர்கள் ப தி ல ளிக்க வேண்டும்.
.
. . .
. . .
. . தொடரும் .
. . .
. . . .

Comments
Post a Comment